'வட்டாரத்தில் பதற்றநிலை மோசமாகும்'

2 mins read
03e5bd26-657a-44b7-a0d5-71109a7ca620
-

பெய்­ஜிங்: அமெ­ரிக்கா, பிலிப்­பீன்­சில் கூடு­த­லான ராணு­வப் படை­களை நிறுத்­து­வ­தால் வட்­டார அள­வில் பதற்­ற­நிலை அதி­க­ரிக்­கு­ம், அமை­தி­யும் நிலைத்­தன்­மை­யும் குறை­யும் என்று சீனா­வின் வெளி­யு­றவு அமைச்சு கூறி­யுள்­ளது. ஒரு தரப்­புக்கு மட்­டும் பலன்­களை அதி­க­ரிக்­கும் நோக்­கு­டன் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படு­வ­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் மாவ் நிங் சொன்­னார்.

தனது ராணு­வத் தளங்­களில் கூடு­த­லா­ன­வற்றை அமெ­ரிக்கா பயன்­ப­டுத்த பிலிப்­பீன்ஸ் வழி­வகுப்­பது குறித்து நடை­பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்­றிப் பேசி­னார்.

அமெ­ரிக்­கப் படை­கள் பயன்­படுத்­த­வுள்ள மேலும் நான்கு ராணு­வத் தளங்­கள் இருக்­கும் இடங்­கள் குறித்த விவரங்களை பிலிப்­பீன்ஸ் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது. அவற்­றில் ஒன்று தென்­சீனக் கடல் பகு­தி­யில் அமைந்­துள்­ளது.

மணி­லா­வுக்­கும் வாஷிங்­ட­னுக்­கும் இடையே 2014ஆம் ஆண்­டில் 'இடி­சிஏ' எனும் மேம்­ப­டுத்­தப்­பட்ட தற்­காப்பு ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தம் உரு­வா­னது. பிலிப்­லீன்­சில் உள்ள ஐந்து ராணு­வத் தளங்­களை அமெ­ரிக்கா பயன்­ப­டுத்த அந்த ஒப்­பந்­தம் வகை­செய்­தது.

பிறகு ஒப்­பந்­தம் மேலும் நான்கு ராணு­வத் தளங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டது. எனி­னும், அந்த நான்கு தளங்­கள் இருக்­கும் இடங்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­டாது இருந்­தது.

ககா­யான் மாநி­லத்­தில் உள்ள ஒரு கடற்­ப­டைத் தளம் மற்றும் ராணுவ விமான நிலை­யம், இசா­பெலா மாநி­லத்­தில் இருக்­கும் ராணுவ முகாம் ஆகி­யவை அந்த நான்கு ராணு­வத் தளங்­களில் அடங்­கும். மேலும் ஒரு தளம் பலா­பாக் தீவில் உள்­ளது.

பலா­பாக், தென்­சீ­னக் கடல் பகு­திக்­குப் பக்­கத்­தில் உள்ள பலா­வான் தீவுக்கு அருகே அமைந்­துள்­ளது.

பிலிப்பீன்சில் அமெரிக்க ராணுவப் படைகளை அதிகரிப்பது குறித்து சீனா எச்சரிக்கை