நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார், 30 பேர் காயமுற்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். வூர்ஷொட்டன் எனும் கிராமத்தில் பளுத்தூக்கி ஒன்றின்மீது ரயில் மோதியதால் விபத்து நேர்ந்ததென தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பின்னிரவு 3.25 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ரயிலில் சுமார் 50 பேர் இருந்தனர்.
படம்: ஏஎஃப்பி

