தோக்கியோ: இதுவரை காணப்படாத அளவில் மோசமான பறவைக் காய்ச்சல் பரவலை ஜப்பான் எதிர்நோக்கி வருகிறது. அங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள், முட்டைகள் ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜப்பானில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பறவைக் காய்ச்சல் பரவல் காலம் தொடங்கியது. அதிலிருந்து இதுவரை 17 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்நாட்டில் மாண்ட கோழிகளைப் புதைக்க இப்போது போதுமான இடம் இல்லை. பறவைக் காய்ச்சல் கிருமி பரவாமலும் தண்ணீரை அசுத்தப்படுத்தாமலும் பார்த்துக்கொள்ள மாண்ட பறவைகளின் உடல்களை சரியாகப் புதைக்கவேண்டும்.
கோழிகளை புதைப்பதற்கு உகந்த நிலங்கள் போதுமான அளவில் இல்லை என்று உள்ளூர் அரசியல் தலைவர்களும் விவசாயிகளும் என்ஹெச்கே ஊடகத்திடம் தெரிவித்தனர்.

