பிரேசிலிய பாலர்பள்ளியில் கோடரித் தாக்குதல்; நான்கு சிறுவர்கள் மரணம்

பிரேசிலிய பாலர்பள்ளியில் கோடரித் தாக்குதல்; நான்கு சிறுவர்கள் மரணம்

1 mins read
62fed1ff-b6b8-417d-8480-d8bb10d71771
-

புலு­மெ­னாவ் (பிரே­சில்): பிரே­சி­லில் உள்ள பாலர்­பள்ளி ஒன்­றில் நிகழ்த்­தப்­பட்ட கொட­ரித் தாக்­கு­த­லில் குறைந்­தது நான்கு சிறு­வர்­கள் மாண்­டு­விட்­ட­னர். குறைந்­தது ஐவர் காய­முற்­ற­னர்.

25 வயது ஆட­வர் ஒரு­வர் சிறிய கோடரி ஒன்­றைக் கொண்டு தாக்­கு­தலை மேற்­கொண்­டிருக்கிறார். இச்சம்­ப­வம் சான்டா கெட்­ட­ரீனா மாநி­லத்­தில் உள்ள புலு­மெ­னாவ் நக­ரில் நேற்று முன்தினம் நேர்ந்­தது.

தாக்­கு­தல்­கா­ரர் காவல்­து­றை­யி­ன­ரி­டம் சர­ண­டைந்­தார். அவ­ருக்­கும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்ட பாலர்­பள்­ளிக்­கும் தொடர்பு ஏதும் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

மாண்ட சிறு­வர்­கள் ஐந்­தி­லிருந்து ஏழு வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தாக்­கு­த­லுக்­குப் பின்னால் இருக்கும் கார­ணத்தை அறிய விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. மேலும் சில தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்ற வதந்­தி­கள் பர­விய நிலை­யில் புலு­மெ­னாவ் நக­ரில் மற்ற பள்­ளி­க­ளி­லும் வகுப்­பு­கள் தற்­காலி­க­மாக நிறுத்­தப்­பட்­டன.