இளம் தலைமுறையினரை ஈர்க்க நிறுவனங்கள் சலுகை

இளம் தலைமுறையினரை ஈர்க்க நிறுவனங்கள் சலுகை

1 mins read
55b7fc18-a17d-418b-bf50-5f9883bdf734
ஊழி­யர் பற்­றாக்­கு­றைக்கு மத்­தி­யில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­களை ஈர்க்க இந்­தச் சலுகையை வழங்க முன்­வந்­துள்­ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

நிறுவனங்கள், வெள்ளிக்கிழமை வேலை நேரத்தைக் குறைப்பதற்கு முன்வந்துள்ளன.

லண்­டன்: இளம் தலை­மு­றை­யினரை (Gen Z) ஈர்க்­கும் பொருட்டு, பிரிட்­டன் நிறு­வ­னங்­கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் வேலை நேரத்­தைக் குறைப்­ப­தற்கு முன்­வந்­துள்­ளன.

ஊழி­யர் பற்­றாக்­கு­றைக்கு மத்­தி­யில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­களை ஈர்க்க இந்­தச் சலு­கையை வழங்க முன்­வந்­துள்­ளன.

1997-2012ஆம் ஆண்­டிற்கு இடைப்­பட்ட காலத்­தில் பிறந்­த­வர்­கள் Gen Z தலை­மு­றை­யினர் என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்­ற­னர்.

அட்­ஜுனா எனும் வேலை­வாய்ப்­பு­க­ளுக்­கான இணை­யத்­தளத்­தில் கிட்­டத்­தட்ட 1,426 நிறு­வ­னங்­கள் இச்­ச­லு­கையை வெளி­யிட்­டுள்­ளன. ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இந்த எண்­ணிக்கை வெறும் 583ஆக இருந்­தது. ஆண்டிற்கு 20,000 முதல் 40,000 பவுண்டு சம்­ப­ளம் பெறும் இள­நிலை ஊழி­யர்­களை ஈர்ப்­பதே இச்­ச­லு­கை­யின் இலக்கு என்­கின்­றன இணை­யத்­த­ளத்­தின் தர­வு­கள்.

இச்­ச­லு­கையை அறி­விக்­கும் நிறு­வ­னங்­கள், ஊழி­யர்­க­ளைப் பற்றி அக்­கறை கொண்­டுள்­ள­தைக் குறிப்­ப­தாக வேலை தேடு­ப­வர்­கள் கரு­தக்­கூ­டும் என்­றும் அதுவே இன்­றைய வேலை சந்­தை­யில் முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது என்­றும் இணை­யத்­த­ளத்­தின் இணை நிறு­வ­னர் ஆண்ட்ரூ சொன்­னார்.