சோல்: தென்கொரியாவின் சோல் நகர சுரங்க ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் அன்றாடம் சராசரியாக 13 வாந்தி சம்பவங்கள் புகார் அளிக்கப்படுவதாக அந்த ரயில் தடத்தை இயக்கும் சோல் மெட்ரோ தெரிவித்தள்ளது.
2020ஆம் ஆண்டில் இருந்து வாந்தி சம்பவங்கள் தொடர்பாக 13,928 புகார்கள் வந்துள்ளன. ஆய்வின்படி, வெள்ளிக்கிழமை,சனிக்கிழமைகளில் அதிக வாந்தி சம்பவங்கள் புகார் அளிக்கப்படுகின்றன. 69.4 விழுக்காட்டு சம்பவங்கள் இரவு 9 மணிக்கு மேல் நடப்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
பெரும்பாலான கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஏப்ரல் 2022ல் இந்த புகார் எண்ணிக்கை ஆக அதிகமாக இருந்தது.
மது விருந்திற்குப் பிறகு வீடு திரும்பும் பயணிகளால் அதிக வாந்தி சம்பவங்கள் புகார் அளிக்கப்படுவதாக சோல் மெட்ரோ நம்புகிறது.

