ஆறாண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா முதலிடம்

ஆறாண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா முதலிடம்

1 mins read
82d5aa97-4b93-4f66-a91e-38438c9aa19f
-

அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்­பின் (ஃபிஃபா) காற்­பந்­துத் தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் அர்­ஜெண்­டினா ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு முத­லி­டம் பிடித்­துள்­ளது.

இதற்­கு­முன் கடை­சி­யாக அந்த அணி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முத­லி­டத்­தில் இருந்­தது.

லய­னல் மெஸ்ஸி தலை­மை­யி­லான அர்­ஜெண்­டினா அணி, கடந்த டிசம்­ப­ரில் கத்­தா­ரில் நடந்த உல­கக் கிண்­ணப் போட்டி­களில் 36 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மகு­டம் சூடி­யது.

அண்­மை­யில் நடந்த நட்­பு­முறை ஆட்­டங்­களில் அவ்­வணி 2-0 என்ற கோல் கணக்­கில் பனா­மா­வை­யும் 7-0 என்ற கோல் கணக்­கில் கியூ­ர­சா­வை­யும் வென்­றது.

பட்­டி­ய­லின் முத­லி­டத்­தில் இருந்த பிரே­சில் மூன்­றா­மி­டத்­திற்கு இறங்­கி­யது. சென்ற மாதம் நடந்த நட்­பு­முறை ஆட்­டத்­தில் அவ்­வணி 0-2 என்ற கோல் கணக்­கில் மொரோக்­கோ­வி­டம் வீழ்ந்­தது.

பிரான்ஸ் அணி இரண்­டா­மிடத்­திற்கு முன்­னே­றி­யது. பெல்­ஜி­யம், இங்­கி­லாந்து, நெதர்­லாந்து, குரோ­வே­ஷியா, இத்­தாலி, போர்ச்­சு­கல் ஆகிய அணி­கள் முறையே நான்­கா­மி­டத்­தில் இருந்து இறங்கு­வ­ரி­சை­யில் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன. ஸ்பெ­யின் பத்­தா­மி­டத்­தில் இருக்­கிறது.

இந்­தியா 101வது இடத்­தி­லும் மலே­சியா 138வது இடத்­தி­லும் சிங்­கப்­பூர் 158வது இடத்­தி­லும் உள்­ளன.

இதற்­கு­முன் இந்­தியா 106வது இடத்­தி­லும் மலே­சியா 145வது இடத்­தி­லும் சிங்­கப்­பூர் 160வது இடத்­தி­லும் இருந்­தன.