இஸ்லாமாபாத்: இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. பொருளியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தானில் இந்நடவடிக்கையால் நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் மாநிலத் தேர்தல்களை அடுத்த மாதம் நடத்த மத்திய அரசாங்கத்து நெருக்குதல் இருந்து வருகிறது. தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று கவனிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக முழுவீச்சில் நடவடிக்ைக ேமற்கொண்டது. அப்போது அந்நாட்டுக்கு பில்லியன் கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டது.
அதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.

