நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

1 mins read
4a176e97-859a-4b12-9d7c-7874ce0df116
-

கோலா­லம்­பூர்: தம்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளைத் தள்­ளு­படி செய்­ய­வைக்­கும் முயற்­சி­யில் மலே­சி­யா­வின் துைணப் பிர­த­மர் ஸாகிட் ஹமிடி இறங்­கி­யுள்­ளார். அந்தக் கோரிக்­கையை விளக்­கும் கடி­தத்தை அவர் தலைமை சட்ட அதி­கா­ரி­யின் அலு­வ­லு­கத்­துக்கு அனுப்பி வைத்­துள்­ளார்.

நேற்று தொட­ர­வி­ருந்து நீதி­மன்ற விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. வழக்கு தொடர்­பான புதிய தக­வல்­களும் ஆதா­ரங்­களும் கிடைத்­துள்­ள­தால் நீதி­மன்ற விசா­ர­ணையை ஒத்­தி­வைக்­கு­மாறு திரு ஸாகிட் கோரிக்கை விடுத்­தார்.

200 பக்­கங்­க­ளுக்­கும் மேல் இருக்­கும் அந்­தக் கடி­தம் தலை­மைச் சட்ட அதி­காரி இட்­ருஸ் ஹரு­ணுக்கு அனுப்­பப்­பட்­ட­தாக திரு ஸாகிட்­டின் வழக்­க­றி­ஞர் ஹமிடி முகம்­மது நோ உறு­திப்­ப­டுத்­தி­னார்.

நீதி­மன்ற விசா­ர­ணையை ஒத்­தி­வைக்க அரசு தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் மறுப்புத் தெரி­விக்­க­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.

கொலின் லாரன்ஸ் செக்­கு­வேரா எனும் நீதி­பதி விசா­ர­ணையை ஒத்­தி­வைக்க ஒப்­புக்­கொண்­டார். நீதி­மன்ற விசா­ர­ணைவரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதிக்கு ஒத்­தி­வைக்கப்பட்டது. திரு ஸாகிட், 47 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார். அவற்­றில் எட்டு ஊழல் குற்­றச்­சாட்­டு­கள், 27 கள்­ளப் பணத்தை நல்­லப் பண­மாக்­கு­வது தொடர்­பா­னவை, 12 நம்பிக்கை மோசடி சார்ந்தவை.

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யவைக்க ஸாகிட் முயற்சி