மியன்மார் ராணுவம் தாக்கியதில் 50 பேர் பலி

மியன்மார் ராணுவம் தாக்கியதில் 50 பேர் பலி

1 mins read
ad8f56b8-1faa-4a68-81d4-95d4e5100ddb
-

யங்­கூன்: மியன்­மா­ரின் மத்­தி­யப் பகு­தி­யில் அந்­நாட்டு ராணு­வம் நடத்­திய வான்­வ­ழித் தாக்­கு­த­லில் குறைந்­தது 50 பேர் மாண்­ட­தாக செய்­தி­நிறுவனங்களும் போராளி அமைப்பு ஒன்­றும் தெரி­வித்­துள்­ளன.

மியன்­மாரை ஆட்சி செய்­யும் ராணு­வத்தை எதிர்ப்­ப­வர்­கள் கலந்­து­கொண்ட நிகழ்ச்சி ஒன்­றைக் குறி­வைத்­துத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

தாக்­கு­தல் கார­ண­மாக 50லிருந்து 100 பேர் மாண்­ட­தாக தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட பகு­தி­யைச் சேர்ந்த மக்­கள் கூறி­ய­தாக பர்­மிஸ் ரேடியோ ஃபிரீ ஏஷியா எனும் வானொலி ஒலி­வ­ழி­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

மாண்­ட­வர்­களில் பொது­மக்­களும் அடங்­கு­வர் என்று நம்­பப்­ப­டு­கிறது. இது­கு­றித்து மியன்­மார் ராணு­வம் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டது.