கோலாலம்பூர்: மார்ச் 13ல் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகருக்குச் சென்ற கொள்கலன் ஒன்றில் இருந்த 336 கிலோ போதைமிகு அபினை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்ததை மலேசிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தோராய மதிப்பு 268.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் என்று மலேசிய காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

