பலத்த காற்றால் வேகமாகப் பரவிய காட்டுத் தீ

பலத்த காற்றால் வேகமாகப் பரவிய காட்டுத் தீ

1 mins read
f2fee2e8-4478-4052-97fc-c1394657a0fd
-

சோல்: தென்­கொ­ரி­யா­வின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள காங்­னி­யுங் நக­ரில் காட்­டுத் தீ ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் பலத்த காற்று, வறண்ட வானிலை ஆகி­யவை கார­ண­மாக அது மிக வேக­மா­கப் பரவி வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ளனர்.

இதன் கார­ண­மாக அந்­நகரில் வசிக்­கும் ஏறத்­தாழ 500 பேர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

தென்­கொ­ரிய நேரப்­படி நேற்று காலை 8.30 மணி அள­வில் காட்­டுத் தீ ஏற்­பட்­டது.

அதை அணைக்க தீயணைப்புப் ­ப­டை­யி­னர் சிர­மப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஹெலிகாப்டர் மூலம் நீர் பீய்ச்சியடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பலத்த காற்று காரணமாக திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை என்று தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீப்பற்றி எரியும் வனப்பகுதிக்கு அருகில் உள்ள வீடு எரிந்து சாம்பலானது. படம்: ராய்ட்டர்ஸ்