ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு

ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு

1 mins read
16862cd4-c2af-4bc0-8de2-b312ea00a971
-

விளா­டி­வோஸ்­டோக்: ரஷ்­யா­வின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள ஷிவெ­லுச் எரி­மலை நேற்று வெடித்­தது.

இதன் விளை­வாக எரி­ம­லை­யி­லி­ருந்து பெரு­ம­ள­வி­லான சாம்­பல் வெளி­யே­றி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதன் கார­ண­மாக அப்­ப­குதி­யில் விமா­னங்­கள் பறக்­கக்­கூடாது என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ரஷ்ய நேரப்­படி நேற்று நள்­ளி­ரவு எரி­மலை வெடித்­தது.

வழிந்­தோ­டிய எரி­ம­லைக் குழம்பு அப்­ப­கு­தி­யில் இருந்த பனிக்­கட்­டி­களை உருக்­கி­யது.

அரு­கில் இருக்­கும் நெடுஞ்­சா­லைக்­குள் எரி­மலை வழிந்­தோ­டக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­பட்­டது.

எரி­ம­லை­யி­லி­ருந்து வெளி­யேறிய சாம்­பல் கார­ண­மாக அரு­கில் உள்ள கிரா­மங்­களில் தரை­யைக்­கூட பார்க்க முடி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. 8.5 செண்­டி­மீட்­டர் உய­ரத்­துக்குச் சாம்­பல் குவிந்­து­கி­டப்­ப­தா­க­வும் கடந்த 60 ஆண்­டு­களில் இப்­படி ஒரு நிலை அப்­பகு­தி­களில் ஏற்­பட்­ட­தில்லை என்றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.