பட்டாசு வெடித்ததில் கை, விரல்களை இழந்த ஆடவர்

பட்டாசு வெடித்ததில் கை, விரல்களை இழந்த ஆடவர்

1 mins read
2536abaa-093a-4d01-9c49-5bda0752599e
-

கோலா திரங்­கானு: மலே­சி­யா­வின் திரங்­கானு மாநி­லத்­தில் நாட்­டுப் பட்­டாசு வெடித்­த­தில் ஆட­வர் ஒரு­வர் தமது இடது கையை இழந்­தார். அது­மட்­டு­மல்­லாது, தமது வலது கையில் பல விரல்­க­ளை­யும் அவர் இழந்­தார். பாதிக்­கப்­பட்ட 27 வயது ஆட­வ­ரின் உட­லின் மற்ற பகு­தி­க­ளி­லும் காயங்­கள் ஏற்­பட்­டன. பட்­டாசு அவ­ரது கைகளில் இருந்­த­போது வெடித்­தது.

இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் அதி­காலை 3.30 மணி அள­வில் திரங்­கா­னு­வில் உள்ள கிரா­மம் ஒன்­றில் நிகழ்ந்­த­தாக அம்­மா­நி­லக் காவல்­துறை கூறி­யது.

அந்த ஆட­வர் சொந்­த­மாக நாட்­டுப் பட்­டா­சைத் தயார் செய்து­கொண்­டி­ருந்­த­போது அது வெடித்­த­தாக திரங்­கானு காவல்­து­றைத் தலை­வர் ரொஹாய்மி முகம்­மது இசா கூறி­னார்.

கடு­மை­யா­கக் காய­முற்ற ஆட­வர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நாட்­டுப் பட்­டா­சைத் தயா­ரிக்­கத் தேவை­யான பொருள்­களை அவ­ரி­டம் விநி­யோ­கித்­த­வரை திரங்­கானு காவல்­துறை வலை­வீ­சித் தேடு­கிறது.