பார்சிலோனா சமநிலை
பார்சிலோனா: ஸ்பானியக் காற்பந்து லீக் ஜாம்பவானான பார்சிலோனா, ஜிரோனாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போடாமல் சமநிலை கண்டது. இருப்பினும், லீக் பட்டியலில் அது முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது நிலையயில் இருக்கும் ரியால் மட்ரிட்டைவிட அது 13 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.
லெஸ்டரின் நிர்வாகி டீன் ஸ்மித்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கும் லெஸ்டர் சிட்டியின் இடைக்கால நிர்வாகியாக டீன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பருவம் நிறைவுபெறும் வரை அவர் இப்பதவியை வகிப்பார். அஸ்டன் வில்லா, நார்விச் சிட்டியின் நிர்வாகியாக டீன் ஸ்மித் முன்பு பதவி வகித்தவர்.
நேப்பொலிக்குக் கடும் சவால்
மிலான்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் ஏசி மிலானை எதிர்கொள்கிறது நேப்பொலி. காயமடைந்திருக்கும் தனது நட்சத்திர வீரர் விக்டர் ஒசிம்ஹென் அதற்குள் குணமடைய வேண்டும் என்று நேப்பொலி வேண்டுகிறது.

