ஜோகூர் பாரு: மலேசியாவில் சென்ற மாதம் நாய் ஒன்றுக்குத் தீ வைத்த 18 வயது இளையர் விலங்குகளைத் துன்புறுத்தியதாகத் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். ஜோகூர் பாருவின் அமர்வு நீதிமன்றத்தில் 18 வயது பிரேடன் யாப் ஹோங் ஷெங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
யாப், பெண் நாய் ஒன்றை அடித்து, தீ வைத்து அதற்குத் தாங்கிக்கொள்ள முடியாத வலியை ஏற்படுத்தியதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அச்சம்பவம் சென்ற மாதம் 27ஆம் தேதியன்று ஜோகூரின் தாமான் ஜாலான் இம்பியாஸ் எமாஸ் 22 பகுதியில் நிகழ்ந்தது.

