சோல்: பிடித்துவைக்கப்பட்டு இருந்த நான்கு தென்கிழக்காசியப் பெண்கள் தென்கொரியாவின் பிரபல சுற்றுலாத்தலமான ஜேஜு தீவில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர். பெண்களைப் பிடித்துவைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்பெண்கள் வேலை பார்ப்பதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தென்கொரியாவுக்குச் சென்றனர். ஜேஜுவில் உள்ள உணவகங்களில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி குடிநுழைவு முகவர் ஒருவர் அப்பெண்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.