நிலநடுக்க நிவாரணப் பணிகளைத் தவறாகப் பயன்படுத்தி ஆயுதங்களை விநியோகித்த ஈரான்

நிலநடுக்க நிவாரணப் பணிகளைத் தவறாகப் பயன்படுத்தி ஆயுதங்களை விநியோகித்த ஈரான்

1 mins read
e4c1475d-3fb7-4260-978a-930047d20f75
-

டெஹ்­ரான்: அண்­மை­யில் சிரி­யாவை நில­ந­டுக்­கம் உலுக்­கி­ய­தைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட நிவா­ர­ணப் பணி­களை ஈரான் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­யது தெரி­ய­வந்­துள்­ளது. நிவா­ர­ணப் பணி­க­ளின் மூலம் தனது பங்­காளி நாடான சிரி­யா­வுக்கு ஈரான் ஆயு­தங்­க­ளை­யும் ராணு­வக் கருவி­க­ளை­யும் வழங்­கி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

சிரியா, ஈரான், இஸ்­ரேல், மேற்­கத்­திய நாடு­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­தோர் இத்­த­க­வலை ராய்ட்­டர்­சி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­ற­னர். சிரி­யா­வில் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கத் தன்­னைக் கூடு­த­லா­கத் தற்­காத்­துக்­கொள்­ள­வும் சிரிய அதி­பர் பஷார் அல்-அசாத்தின் நிலை­மையை வலுப்­படுத்­த­வும் இவ்­வாறு செய்­யப்­பட்­ட­தாக ராய்ட்­டர்­சுக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது.

கடந்த பிப்­ர­வரி மாதம் ஆறாம் தேதி­யன்று துருக்­கி­யை­யும் சிரி­யா­வை­யும் மோச­மான நில­ந­டுக்­கம் உலுக்­கி­யது. 44,000க்கும் அதி­க­மா­னோர் அதில் உயி­ரிழந்­தனர்.