உக்ரேனில் போரிடும் பல்வேறு நாடுகளின் சிறப்புப் படைகள்

உக்ரேனில் போரிடும் பல்வேறு நாடுகளின் சிறப்புப் படைகள்

1 mins read
29905f77-64df-4671-acd6-e6f98dd9cf25
-

கியவ்: பிரிட்­டன் உள்­ளிட்ட பல நாடு­க­ளின் சிறப்பு ராணு­வப் படை­கள் உக்­ரேன் போரில் நேர­டி­யாக ஈடு­பட்டிருப்பது தெரி­ய­வந்துள்­ளது. போர் தொடர்­பி­ல் இணை­யத்­தில் வெளி­யி­யான பல ரக­சிய ஆவ­ணங்­களில் இந்த விவ­ரம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­க­ளின்­படி, சென்ற மாதம் 23ஆம் தேதி நில­வ­ரப்­படி பிரிட்­டன், லாட்­வியா, பிரான்ஸ், அமெ­ரிக்கா, நெதர்­லாந்து போன்ற நாடு­க­ளின் சிறப்­புப் படை­கள் உக்­ரே­னில் இயங்­கு­கின்­றன. அவற்­றில் ஆக அதி­க­மான படை­கள் பிரிட்­ட­னைச் சேர்ந்­தவை.

சிறப்­புப் படை­கள் உக்­ரே­னில் இயங்­கும் இடங்­கள் குறித்த தக­வல் ஏதும் ஆவ­ணங்­களில் இடம்பெறவில்லை.

இவற்­றோடு, இனி ரஷ்­யா­வுக்கு எதி­ரா­கத் தாக்­கு­தல் மேற்­கொள்­ள­வும் ரஷ்­யத் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து தொடர்ந்து தன்­னைத் தற்­காத்­துக்­கொள்­ள­வும் உக்­ரே­னுக்கு ஆற்­றல் உள்­ளதா என்ற பெரும் கவலை அமெ­ரிக்­கா­வுக்கு இருப்­ப­தும் ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் கண்ட ஆவ­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் இத்­த­க­வல் இடம்­பெற்­றுள்­ளது.

ரஷ்­யப் படை­கள்­மீது உக்­ரேன் தாக்­கு­தல் மேற்­கொள்­ளும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதுவே உக்­ரேன் இது­வரை இவ்­வாண்டு மேற்­கொள்­ளும் முக்­கிய ராணுவ நட­வ­டிக்­கை­யாக அமை­யும்.

உக்­ரேன் போர் தொடர்­பில் அண்­மை­யில் பல ரக­சிய ஆவ­ணங்­கள் இணை­யத்­தில் வெளி­யா­யின.

அந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் அமெ­ரிக்கா குற்­ற­வி­யல் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது.