நீருக்குள் வாகனம்; 2 நாள்களுக்குப் பின் பெண் மீட்பு

நீருக்குள் வாகனம்; 2 நாள்களுக்குப் பின் பெண் மீட்பு

1 mins read
a9cece3b-e22d-4475-846d-00f604a5cd4f
-

ஆஸ்­டின்: அமெ­ரிக்­கா­வில் இரண்டு நாள்­க­ளா­கக் காண­மற்­போ­யி­ருந்த பெண் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டுள்­ளார். இச்­சம்­ப­வம் டெக்­சஸ் மாநி­லத்­தின் மேரி­யன் கவுன்டி பகு­தி­யில் நேர்ந்­தது.

'லேக் ஓ தி பைன்ஸ்' எனும் ஏரி­யில் நிகழ்ந்த சம்பவம் குறித்து இம்­மா­தம் ஏழாம் தேதி­யன்று தங்­க­ளுக்கு அழைப்பு வந்­த­தென மேரி­யன் கவுன்டி காவல்­துறை பிரிவு ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தி­ருந்­தது. 'ஜீப்' வாக­னம் ஒன்று நீரில் மூழ்­கி­ய­தைக் கண்­ட­தாக ஒரு மீன­வர் காவல்­து­றைக்­குத் தக­வல் கொடுத்தார்.

காணா­மற்­போன பெண் வாக­னத்­தி­ல் இருந்தார். சிகிச்­சைக்­காக அவர் உள்­ளூ­ரில் இருக்­கும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.