வட தைவானில் ஆகாயப் போக்குவரத்துத் தடை; 33 சேவைகள் பாதிப்பு

வட தைவானில் ஆகாயப் போக்குவரத்துத் தடை; 33 சேவைகள் பாதிப்பு

1 mins read
5f1f8e22-b3d3-4361-8d16-f76283787407
-

தைப்பே: தைவா­னின் வடக்­குப் பகு­தி­யில் நாளை மறு­நாள் ஆகா­யப் போக்­கு­வ­ரத்­துக்கு சீனா தடை விதிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்­கை­யால் சுமார் 33 விமா­னச் சேவை­கள் பாதிக்­கப்­படும் என்று தைவா­னின் 'சிஎன்ஏ' எனப்­படும் சென்ட்­ரல் நியூஸ் ஏஜன்சி ஊட­கம் கூறியுள்ளது.

தைவா­னின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வாங் குவோ-சாய் இதைத் தெரி­வித்­த­தாக அது குறிப்­பிட்­டது. ஆகா­யப் போக்­கு­வரத்­துத் தடை­யால் விமா­னச் சேவை­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு பெரிய அள­வில் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு வாங் கூறி­யி­ருந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

நாளை மறு­நாள் முதல் வரும் செவ்­வாய்க்­கி­ழமை வரை ஆகா­யப் போக்­கு­வரத்­துத் தடையை விதிக்­கப்­போ­வ­தாக முத­லில் பெய்­ஜிங், தைப்­பே­யி­டம் கூறி­யிருந்­தது.

தைப்பே அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தைத் தொடர்ந்து நாளை மறு­நாள் காலை 27 நிமி­டங்­க­ளுக்கு மட்­டும் தடை­ செயல்­ப­டுத்­தப்­படும் என்று தைவா­னின் போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­தது.