ஆஸ்டின்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பால் பண்ணை ஒன்றில் வெடிப்பு நிகழ்ந்ததால் 18,000 மாடுகள் மாண்டுவிட்டன. இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் தினமுத் வதைக்கப்படும் மாடுகளில் கிட்டத்தட்ட மும்மடங்கு என்று 'யுஎஸ்ஏ டுடே' ஊடகத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இச்சம்பவம் 'சவுத் ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்' பால் பண்ணையில் நிகழ்ந்தது. அதற்கு ஆக அருகில் உள்ள டிமிட் நகரின் மேயர் ரோஜர் மலோன், இத்தனை மாடுகள் மாண்டது பெரும் அதிர்ச்சியைத் தருவதாகக் கூறினார். கருவி ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

