விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
30e5af77-6dc8-4555-bc6c-75d4d63efe6e
-

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

சென்னை: இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை (சிஎஸ்கே) வென்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

முதலில் பந்தடித்த ராஜஸ்தான் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தில் வெல்ல சிஎஸ்கே 176 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.

கடைசி பந்துவரை போராடிய சிஎஸ்கே இலக்கை எட்டத் தவறி ஆறு விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

செல்சிக்கு அடிமேல் அடி

மட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்டுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான செல்சி (படம்). ஏற்கெனவே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் செல்சிக்குப் பிரச்சினைகள் தீர்வதுபோல் தெரியவில்லை.

மற்றொரு காலிறுதியாட்டத்தில் நேப்பலியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஏசி மிலான். இரண்டும் இத்தாலியைச் சேர்ந்த குழுக்கள். நேப்பலி, இத்தாலியின் 'செரி ஆ' லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றில் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இருமுறை விளையாடும். இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியாளர் குழு தீர்மானிக்கப்படும்.