மலேசிய மனிதவள அமைச்சு அதிகாரி கைது

மலேசிய மனிதவள அமைச்சு அதிகாரி கைது

1 mins read
f392fa5c-54f9-4234-9824-5e5f11b59db7
-

கோலா­லம்­பூர்: தமது அமைச்­சைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வரை மலே­சி­யா­வின் 'எம்­ஏ­சிசி' எனப்­படும் ஊழல் தடுப்­புப் பிரிவு கைது செய்­ததை அந்­நாட்டின் மனி­த­வள அமைச்­சர் வி. சிவ­கு­மார் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார். எனி­னும், விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தால் இது குறித்து திரு சிவ­கு­மார் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டார்.

"அதி­காரி கைதா­னது எனக்­குத் தெரி­யும். ஊழல் தடுப்­புப் பிரிவு விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தால் இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் நான் கருத்து தெரி­விக்க முடி­யாது," என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டார். தேவைப்­பட்­டால் விசா­ர­ணைக்­குத் மனி­த­வள அமைச்சு முழு ஒத்­துழைப்பை வழங்­கும் என்­றும் திரு சிவ­கு­மார் கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தன் தொடர்­பில் ஊழல் இடம்பெற்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அதை­யொட்டி மனி­த­வள அமைச்­சின் அதி­காரி கைது செய்­யப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கிறது.