ஜகார்த்தா: மியன்மாரில் உள்ள கிராமம் ஒன்றில் அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட ஆகாயப் படைத் தாக்குதலுக்கு எதிராக ஆசியான் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் இந்தோனீசியா இதைக் குறிப்பிட்டது.
சகாய்ங் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலில் மரண எண்ணிக்கை 100ஐத் தொடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இதுவே மியன்மார் ராணுவம் நடத்தியுள்ள ஆக மோசமான தாக்குதல்.