விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
43dca678-eb18-4c99-b19f-203cedf54bea
-

தனக்கு எதிராக கோல்

போட்ட மான்செஸ்டர் யுனைடெட்

பாரிஸ்: யூரோப்பா லீக் ஆட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை செவியா குழுவை எதிர்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் முதல் பாதி ஆட்டத்திலேயே, அதுவும் முதல் 21 நிமிடங்களிலேயே, இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து தாக்குதலில் முனைப்புக் காட்டிய யுனைடெட் செவியாவுக்கு எதிராக மேற்கொண்டு கோல்கள் போட முடியாமல் திணறியது.

இதில் யுனைடெட் வீரர் ஆன்டனி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. அத்துடன் ஓய்ந்தது யுனைடெட்டின் தாக்குதல் முயற்சி. இதன் பிறகு, சற்று சுதாரித்துக் கொண்ட செவியா பதில் தாக்குதலில் இறங்கியது. இதனால், முதலில் மலாசியா என்ற வீரரின் கால் பட்டு யுனைடெட் தனக்கு எதிரான முதல் கோலை தானே போட்டுக்கொண்டது.

பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் யுனைடெட்டின் மற்றொரு தற்காப்பு ஆட்டக்காரரான மெக்குவயரின் காலில் பட்டு தனக்கு எதிரான இரண்டாவது கோலையும் யுனைடெட்டே போட்டு ஆட்டத்தை 2-2 என சமநிலைப்படுத்தியது.

ஆக மொத்தம் நேற்றைய ஆட்டத்தில் விழுந்த நான்கு கோல்களும் யுனைடெட் வீரர்கள் போட்ட கோல்கள்.

இந்தியாவின் பூப்பந்து

வீராங்கனை சிந்து வருகை

சிங்கப்பூர்: இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து உட்பட உலகின் முன்னணி பூப்பந்து வீரர்கள் சிங்கப்பூர் வருகின்றனர்.

சிங்கப்பூரில் ஜூன் 6 முதல் 11 வரை சிங்கப்பூர் பொதுவிருது பூப்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதில் சிந்து உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. உலகத் தர வரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தோனீசியாவைச் சேர்ந்த ஆண்டனி சினிசுகா கின்டிங், 5வது இடத்தில் உள்ள அப்ரியானி ரஹாயு, சிட்டி ஃபாடியா சில்வா ரமதாந்தி ஆகியோரும் இதில் போட்டியிடுகின்றனர்.