ரகசிய ஆவணங்கள் கசிவு; 21 வயது இளையர் கைது

ரகசிய ஆவணங்கள் கசிவு; 21 வயது இளையர் கைது

1 mins read
92246801-6599-4ca1-a53d-f94d00de06cf
-

வாஷிங்­டன்: ரக­சிய ஆவ­ணங்­கள் கசிந்­தது தொடர்­பில் 21 வயது இளை­யரை அமெ­ரிக்க காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

'டிஸ்­கார்ட் டெக்ஸ்ட்', 'வீடியோ சாட்' போன்ற செய­லி­கள் வழி­யாக சிறிய குழுக்­க­ளி­டையே ஆவ­ணம் கசிந்­தது.

பின்­னர் டெலி­கி­ரா­மில் அவை பர­வ­லா­கக் கசிந்­தது. இதையடுத்து அனைத்­து­லக செய்தி நிறு­வ­னங்­கள் முக்­கிய ஆவ­ணங்­கள் கசிந்­தது குறித்து அறிந்து கொண்­டன. கைது செய்­யப்­பட்ட ஜேக் டெய்ஸிரா விமா­னப் படை­யில் பணி­யாற்றி வரு­கி­றார். வியா­ழக்­கி­ழமை முற்­ப­கு­தி­யில் பேசிய அதி­பர் ஜோ பைடன், ஆவ­ணக் கசிவு குறித்து விசா­ரணை நடை­பெ­று­வ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

"நீதித் துறை­யும் புல­னாய்வு சமூ­க­மும் தற்­போது முழு அள­வி­லான விசா­ர­ணையை நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­ன," என்று அவர் தெரி­வித்­தார்.

ஆவ­ணங்­கள் கசிந்­தது பற்றி தமக்­குக் கவ­லை­யில்லை என்று கூறிய அவர், எப்­படிக் கசிந்­தது என்­பதே கவலை என்­றார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­தது குறித்த அமெ­ரிக்­கா­வின் மதிப்­பீடு, உக்­ரே­னில் அபா­ய­க­ர­மான முறை­யில் ஏவுகணை­கள் தீர்ந்து வரு­வது, தாக்­கு­த­லுக்கு எதி­ராக தற்­காத்­துக் கொள்ள இடை­ம­றிக்­கும் சாத­னங்­கள் உள்­ளிட்ட விவ­ரங்­கள் ஆவ­ணங்­களில் இடம்­பெற்று இருந்­தன.

எகிப்து, தென்­கொ­ரியா, இஸ்­ரேல் உள்­ளிட்ட நட்பு நாடுகளை­யும் அமெ­ரிக்கா வேவு பார்த்­த­தாக ஆவ­ணங்­கள் தெரிவிக்­கின்­றன.