புதிய திட எரிபொருள் ஏவுகணையைச் சோதித்ததாக வடகொரியா கொக்கரிப்பு

புதிய திட எரிபொருள் ஏவுகணையைச் சோதித்ததாக வடகொரியா கொக்கரிப்பு

1 mins read
67a97459-f02b-4f2b-bf4a-78f4f90be915
-

சோல்: வட­கொ­ரியா, புதிய திட எரி­பொ­ரு­ளில் செயல்­படும் கண்­டம் விட்டு கண்­டம் பாயும் ஹுவா­சாங்-8 என்ற ஏவு­க­ணை­யைச் சோதித்­த­தாக நேற்று பெரு­மை­யு­டன் மார் தட்­டிக்­கொண்­டது. அணு­வா­யு­தத் தாக்கு­த­லைச் சமா­ளிக்­கும் ஆற்றலை வலுப்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம் என்று அந்­நாட்­டின் அதி­கா­ர­பூர்வ ஊட­கம் தெரி­வித்­தது.

வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன்­னின் வழி­காட்டு­த­லில் சோதனை நடை­பெற்­றது. "எதி­ரி­க­ளுக்கு பாது­காப்பு நெருக்­க­டியை இது ஏற்­ப­டுத்­தும். மேலும் எதி­ரி­கள் சிந்­த­னை­யற்ற, பொறுப்­பற்ற செயல்க­ளைக் கைவி­டும் வரை ஆபத்­தான எதிர் நட­வ­டிக்­கை­களை எடுத்து அச்சத்தை ஏற்படுத்து வோம்," என்று வட­கொ­ரியா எச்­ச­ரித்­துள்­ளது.

அண்­மைய தென்­கொ­ரிய-அமெ­ரிக்க கூட்டு ராணு­வப் பயிற்­சியை வட­கொ­ரியா கடுமை யாகக் குறை­கூ­றி­யி­ருந்­தது.

ஆனால் வட­கொ­ரியா இன்­ன­மும் அத்­த­கைய ஆயு­தத்தை உரு­வாக்கி வரு­வ­தா­க­வும் அந்­தத் தொழில்­நுட்­பத்­தில் தேர்ச்சி பெற அதிக காலம் தேவைப்­படும் என்றும் தென்­கொ­ரிய தற்­காப்பு அமைச்சு கூறி­ உள்ளது.