மியன்மார் ஆகாயத் தாக்குதலில் 170 பேர் பலி

மியன்மார் ஆகாயத் தாக்குதலில் 170 பேர் பலி

1 mins read
8a80f4d3-400e-4a87-8514-e89d0cd4269f
-

நேப்­பி­டாவ்: மியன்­மா­ரில் ஜன­நா­யக ஆட்­சி­யைக் கவிழ்த்த ராணுவ அர­சாங்­கம் அண்­மை­யில் மேற்கொண்ட ஆகா­யத் தாக்­கு­த­லில் குறைந்­தது 170 பேர் கொல்­லப்பட்­டி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­கிறது. உடல்­களை தக­னம் செய்து வரும் குழு­வி­னர் இந்த எண்­ணிக்கையை வெளியிட்டு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தியுள்­ள­னர். கடந்த 2021ஆம் ஆண்­டில் ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கம் கவிழ்ந்த பிறகு ராணு­வம் ஆட்­டம் போட்டு வரு­கிறது. அதன் அட்­டூ­ழி­யத்­தில் இது­வரை 3,200 பேர் கொல்­லப்­பட்­ட­னர் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இந்த நிலை­யில் மத்­திய சாகெய்ங் வட்­டா­ரத்­தில் பாஸி கியே கிரா­மத்­தில் ராணு­வம் ஆகா­யத் தாக்குதலை நடத்­தி­யது. இதில் 38 குழந்­தை­கள் உட்­பட 170 பேர் பலி யானதாக தகன வேலை­யில் ஈடு­பட்­டுள்ள ஒரு­வர் தெரி­வித்­தார்.