ஜோகூர் பேருந்து நிறுத்தத்தில் கை, கால் வெட்டப்பட்ட உடல்

ஜோகூர் பேருந்து நிறுத்தத்தில் கை, கால் வெட்டப்பட்ட உடல்

1 mins read
9ce74d29-5a92-47fd-8fbb-3e536f280dd8
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் பேருந்து நிறுத்­தம் ஒன்­றில் அழு­கிப்­போன நிலை­யில் கை, கால்கள் வெட்­டப்­பட்ட பெண்­ணின் உடல் ஒரு பைக்­குள் காணப்­பட்­டது. அந்த உடல், ஒரு வெளி­நாட்­ட­வ­ருக்­குச் சொந்­த­மா­ன­தாக இருக்­கலாம் என்று காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். பிரே­தப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்ட பிறகு அந்த விவரம் தெரி­ய­வந்­த­தாக ஜோகூர் காவல்­து­றைத் தலை­வர் கமா­ருல் ஸாமான் மாமாத் கூறி­னார்.

மலே­சி­யா­வில் எல்­லோ­ருக்­கும் குழந்­தைப் பரு­வத்­தில் 'பிசிஜி' எனப்­படும் காச­நோய் தடுப்­பூசி போடப்­படும்; மாண்ட பெண்­ணின் கையில் அதற்கான தழும்பு இல்லை என்று திரு கமா­ருல் குறிப்­பிட்­டார். சாலைப் பாது­காப்பு நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்ட­போது அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"மாண்ட பெண் அநே­க­மாக மலே­சி­யா­வைச் சேர்ந்­த­வர் அல்ல என்­பதை மட்­டும் தற்­போ­தைக்கு என்­னால் தெரிவிக்கமுடியும்," என்று கூறிய அவர், யாரும் காணா­மற்­போ­ன­தாக காவல்­துறைக்­குப் புகார் வர­வில்லை என்­றும் சொன்னார். மாண்ட பெண்­ணுக்­குக் குறைந்­தது 25 வயது இருக்கும் என்­றும் அவர் உயி­ரி­ழந்து இரண்டு வாரங்­க­ளுக்கு மேல் ஆகி­யி­ருக்­கும் என்­றும் சுல்­தானா அமினா எனும் மருத்து­வ­மனை தெரி­வித்­தது.