அமெரிக்காவில் தவறான முகவரிக்குச் சென்று காவல்துறையினர் ஆடவரைக் கொன்ற காட்சி பதிவு

அமெரிக்காவில் தவறான முகவரிக்குச் சென்று காவல்துறையினர் ஆடவரைக் கொன்ற காட்சி பதிவு

1 mins read
c1e1307b-75a5-4ac9-b3ea-1dac1aa0eb50
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் நியூ மெக்­சிகோ மாநி­லத்­தில் தவ­றான முக­வ­ரிக்­குச் சென்ற காவல்­துறை அதி­கா­ரி­கள் அங்கு ஓர் ஆட­வ­ரைச் சுட்­டுக்­கொன்­றது காணொ­ளி­யில் பதி­வா­கி­யுள்­ளது. ஃபார்மிங்­டன் நக­ரக் காவல்­து­றை­யி­னர் அந்­தக் காணொ­ளியை வெளி­யிட்­டுள்­ள­னர்.

ஒரு வீட்­டில் குடும்ப வன்­முறை இடம்­பெ­று­வ­தா­கக் காவல்­து­றைக்­குப் புகார் வந்­தது. அதைத் தொடர்ந்து அதி­கா­ரி­கள் தவ­றான வீட்­டுக்­குச் சென்­ற­னர்.

தாங்­கள் செல்­ல­வேண்­டிய முக­வ­ரியை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள அதி­கா­ரி­கள் விட்­டில் இருந்த ஆட­வ­ரு­டன் பேசி­னர்; சிறிது நேரம் கழித்து ஆட­வர் அதி­கா­ரி­களை நோக்கித் துப்­பாக்­கியை நீட்­டி­ய­தும் அதி­காரி­கள் அவ­ரைச் சுட்­டதும் காணொ­ளி­யில் பதிவானது.

ராபர்ட் டாட்­சன் என்ற அந்த ஆட­வர் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­டார். இது குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.