கராச்சி விலங்குத் தோட்டத்தில் கவலைக்கிடமாக இருக்கும் யானை

கராச்சி விலங்குத் தோட்டத்தில் கவலைக்கிடமாக இருக்கும் யானை

1 mins read
bda69224-495f-4daf-80a7-0f6ef29b2622
-

கராச்சி: பாகிஸ்­தா­னின் கராச்சி நகர விலங்­குத் தோட்­டத்­தில் குளத்­துக்­குள் விழந்து காய­முற்ற யானை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது. இச்­சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்­தது.

குளத்­துக்­குள் விழுந்­த­வு­டன் 'நூர் ஜெகான்' என்ற பெய­ரைக் கொண்ட இந்த 17 வயது யானையை பாரந்­தூக்கி, கயிறு உள்­ளிட்டவற்றைக் கொண்டு மீட்­கு­மாறு 'ஃபோர் பாஸ்' எனும் உல­க­ளா­விய விலங்கு நலன் அமைப்பு பரிந்­து­ரைத்­தது. மீட்­கப்­பட்­ட­தி­லி­ருந்து வலு­வி­ழந்து மரத்­துக்கு அருகே அதி­கம் அசை­வின்றி படுத்­த­படி இருக்­கிறது 'நூர் ஜெகான்'.

விழுந்ததில் குடல் பிரச்சினை, வயிற்றில் உருவான ரத்தக் கட்டி ஆகியவற்றால் இந்த யானை அவதிப்படுகிறது. இதை உயிர் பிழைக்க வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.