சூடான் மோதல்: பொதுமக்கள் மரணம்

சூடான் மோதல்: பொதுமக்கள் மரணம்

1 mins read
75069fb8-81a3-4004-8b0c-906206b07a36
-

கார்ட்­டூம் (சூடான்): சூடா­னில் அந்­நாட்டு ராணு­வம், தலை­ந­கர் கார்ட்­டூ­முக்கு அருகே உள்ள துணை ராணு­வப் படைத் தளம் ஒன்­றின்­மீது நேற்று ஆகா­யப் படைத் தாக்­கு­தல்­களை நடத்­தியது. நாட்­டில் மீண்­டும் ஆதிக்­கம் செலுத்த ராணு­வம் தாக்­கு­தலை மேற்­கொண்­டது.

சூடான் ராணு­வத்­துக்­கும் துணை ராணு­வப் படை­க­ளுக்­கும் இடையே இடம்­பெற்­று­வ­ரும் மோதல்­களில் பல வீரர்­கள் மாண்­ட­தோடு குறைந்­தது 56 பொது­மக்­களும் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் கார்ட்­டூ­முக்கு அருகே உள்ள ஒம்­டர்­மன் நக­ரில் அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான 'ஆர்­எஸ்­எஃப்' எனப்­படும் துணை ராணு­வப் படைத் தளத்தை சூடான் ராணு­வம் தாக்­கி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

சூடா­னில் ராணு­வ­த்துக்கும் துணை ராணு­வப் படை­களுக்கும் இடையே ஆட்­சி­யைப் பிடிக்கப் போட்டி இருந்து வருகிறது.

மோதல்­களில் குறைந்­தது 56 பொது­மக்­கள் மாண்­ட­தைத் தெரி­வித்த சூடா­னின் மத்திய மருத்­து­வர் குழு, மோதல்­களில் ஈடு­பட்­டோர் உட்­பட 595 பேர் காய­முற்­ற­தா­க­வும் கூறி­யது. ராணு­வத்­துக்­கும் துணை ராணு­வப் படை­க­ளுக்­கும் இடை­யி­லான மோதல்­கள் நேற்று முன்­தி­னம் தொடங்­கின.

ராணுவ வீரர்கள் பலரும் மாண்டனர். எனினும், அவர்களின் மரண எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.