பாப்புவா பிரிவினைவாதிகள்: 9 ராணுவ வீரர்களைக் கொன்றோம்

பாப்புவா பிரிவினைவாதிகள்: 9 ராணுவ வீரர்களைக் கொன்றோம்

2 mins read
b5a60531-4702-4c40-992a-d2bd20c31da1
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாப்­புவா வட்­டா­ரத்­தில் ஒன்­பது ராணுவ வீரர்­க­ளைத் தாங்­கள் கொன்­று­விட்­ட­தாக அப்­ப­கு­தி­யின் பிரி­வி­னை­வா­தப் போரா­ளி­கள் கூ­றி­யுள்­ள­னர். பேச்­சு­வார்த்தை நடத்த தங்­க­ளின் கோரிக்­கைக்கு ஜகார்த்தா பதி­ல­ளிக்­கா­த­தால் நேற்று முன்­தி­னம் இவ்வாறு செய்ததாக அவர்­கள் தெரி­வித்­தனர்.

எனி­னும், சனிக்­கி­ழ­மை­யன்று நடந்த தாக்­கு­த­லில் ஒரு ராணுவ வீரர் உயி­ரி­ழந்­த­தாக இந்­தோ­னீ­சிய ராணு­வம் சொல்­கிறது. பிடித்து­வைக்­கப்­பட்­டுள்ள விமானி ஃபிலிப் மெர்ட்­டன்­சைத் தேடும் பணி­யில் இதர அதி­கா­ரி­கள் பல்­வேறு இடங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­தாக ராணு­வப் பேச்­சா­ளர் ஜூலி­யஸ் விட்­ஜோ­ஜோனோ கூறி­னார்.

உள்­ளூர் நேரப்­படி நேற்று பிற்­ப­கல் 2.03 மணி நில­வ­ரப்­படி ஒரு­வர் மட்­டுமே மாண்­ட­தா­கத் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தென அவர் குறிப்­பிட்­டார்.

"அப்­ப­கு­திக்­குப் போவது சவா­லான ஒன்று. குறிப்­பாக பரு­வ­நிலை­யைக் கணிக்­க­மு­டி­யா­மல் இருப்­ப­தால் இந்தச் சூழல் எழுந்துள்ளது. அத­னால் இதன் தொடர்­பில் வேறு எந்­தத் தக­வ­லும் எங்­க­ளுக்­குக் கிடைக்­க­வில்லை," என்று திரு ஜூலி­யஸ் சொன்­னார். கூடு­த­லா­னோர் மாண்­ட­தா­கத் தக­வல் வெளி­யாகியிருப்­பது குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டபோது அவர் பேசி­னார். திரு மெர்ட்­டன்ஸ் பிடித்­து­வைக்­கப்­பட்­டுள்ள பகு­தியை ராணு­வம் அடை­யா­ளம் கண்டுள்ள­தா­க­வும் அவ­ரைத் தேடும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­படும் என்­றும் திரு ஜூலியஸ் தெரி­வித்­தார்.

'டிபி­என்­பிபி' எனும் பாப்­புவா வட்டாரத்தின் பிரி­வி­னை­வா­தப் போரா­ளி­கள் குழு, நியூ­சி­லாந்­தைச் சேர்ந்த திரு மெர்ட்­டன்­சைக் கடந்த பிப்­ர­வரி மாதம் கடத்­திச் சென்­றது. அவரை விடு­விக்க ஜகார்த்தா, பாப்­புவா வட்­டா­ரத்தை சுதந்­திர நாடாக அங்­கீ­க­ரிக்­க­வேண்­டும் என்று 'டிபி­என்­பிபி' நிபந்­தனை விதித்­தது.

பிறகு நிபந்­த­னை­யைக் கைவி­டத் தாங்­கள் தயா­ராய் இருப்­ப­தா­க­வும் பேச்­சு­வார்த்தை நடத்த விரும்­பு­வ­தா­க­வும் அக்­குழு ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வனத்­தி­டம் கூறி­யி­ருந்­தது.

எனி­னும், சென்ற மாதம் 23ஆம் தேதி­யன்று இந்­தோ­னீ­சிய ராணு­வ­மும் காவல்­து­றை­யும் பொது­மக்­க­ளைத் தாக்­கி­ய­தாக 'டிபி­என்­பிபி' பேச்­சா­ளர் செபி சாம்­பொம் சொன்­னார். அதற்­குப் பதி­லடி கொடுக்­கப்­போ­வ­தாக 'டிபி­என்­பிபி' படை­கள் கூறி­யிருந்­த­தா­க­வும் பதி­லடி நட­வ­டிக்­கை­கள் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.