தாய்லாந்து பொதுத் தேர்தல்: வலுவான நிலையில் பும்ஜாய்தாய் கட்சி

தாய்லாந்து பொதுத் தேர்தல்: வலுவான நிலையில் பும்ஜாய்தாய் கட்சி

1 mins read
3446d48d-6105-4a2b-83c0-af542fa1c12a
-

பேங்­காக்: அடுத்த மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கும் தாய்­லாந்து பொதுத் தேர்­த­லில் பும்­ஜாய்­தாய் கட்சி வலு­வான நிலை­யில் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டுகிறது. கஞ்சா பயன்­பாடு தொடர்­பி­லான சட்­டங்­க­ளைத் தளர்த்­து­வது உள்­ளிட்ட வாக்­கு­றுதி­களை அக்­கட்சி நிறை­வேற்­ற வகைசெய்தது இதற்­குக் கார­ணம்.

முன்­னாள் கட்­டு­மான வர்த்­த­க­ரான அனுட்­டின் சாய்ர்ன்­வி­ராக்­கு­லின் தலைமை­யில் பும்­ஜாய்­தாய் கட்சி தேர்­த­லில் கள­மி­றங்­க­வுள்­ளது. நாடா­ளு­மன்­றத்­தின் கீழ­வை­யில் 500 இடங்­களில் குறைந்­தது 100 இடங்­க­ளைக் கைப்­பற்­று­வது அக்­கட்­சி­யின் இலக்கு.

இலக்கை அடைந்­தால் தேர்­தலுக்­குப் பிறகு ஆளும் கூட்­ட­ணி­யில் இடம்­பெற பும்­ஜாய்­தாய் எண்­ணம் கொண்­டுள்­ளது.

இதற்கிடையே, கருத்­துக் கணிப்­பு­களில் தற்­போ­தைய பிர­த­மர் பிரா­யுத் சான் ஓசா பின்­தங்கி­யி­ருப்­ப­தா­க தெரி­விக்­கப்­பட்­டது. அடுத்த மாதம் 14ஆம் தேதி­யன்று நடை­பெ­ற­வுள்ள தேர்­தல் திரு சான் ஓ­சா­வின் ராணுவ ஆத­ர­வுக் கட்­சி­யான பழை­மை­வா­தக் கட்­சிக்­கும் முன்­னாள் பிர­த­மர் தக்­சின் ஷினா­வாட்­ரா­வின் மகள் பெய்த்­தொங்­தார்ன் ஷினா­வாட்­ரா­வின் ஃபியு தாய் கட்­சிக்­கும் இடை­யி­லான போட்­டி­யாக அமையும்.