மலேசியாவைப் பாதிக்கவுள்ள அதிக வெப்பநிலை, புகைமூட்டம்

மலேசியாவைப் பாதிக்கவுள்ள அதிக வெப்பநிலை, புகைமூட்டம்

1 mins read
0a1eabb1-ee41-41f5-a089-349e297aa290
-

பெட்­டா­லிங் ஜெயா: வரும் மாதங்­களில் மலே­சி­யா­வில் வெப்­ப­நிலை கூடும், புகை­மூட்­டம் அதி­க­ரிக்­கும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டிப்­பட்ட பரு­வ­நி­லையை எதிர்­கொள்­ளத் தயா­ராய் இருக்­க­வேண்­டும் என்று அந்நாட்டின் சுற்­றுப்­புற, பரு­வ­நிலை மாற்ற அமைச்­சர் நிக் நாஸ்மி நிக் அக­மது மக்­களை எச்­ச­ரித்­தார்.

"புகை­மூட்­டத்தை அதி­கம் எதிர்­பார்க்­க­லாம். குறிப்­பாக வரும் ஆகஸ்ட் மாதம் வரை மழைக்­கா­லம் மாறும் வேளை­யில் இந்­நிலை உரு­வா­கும்.

"இந்தக் கால­கட்­டத்­தில் பொது­வாக வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும், அதிக வறட்­சியை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும். கூடு­த­லான இடங்­களில் காட்­டுத் தீ ஏற்­ப­ட­லாம்," என்று 'தி ஸ்டார்' நாளி­தழி­டம் அவர் கூ­றி­னார்.