மலேசிய அமைச்சர் சிவகுமாருக்கு அழைப்பாணை

மலேசிய அமைச்சர் சிவகுமாருக்கு அழைப்பாணை

1 mins read
a45b8d66-d41e-4cf5-8b74-4df581cea7a2
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் மனி­த­வள அமைச்­சர் வி. சிவ­கு­மா­ருக்கு 'எம்­ஏ­சிசி' எனப்­படும் அந்­நாட்­டின் ஊழல் தடுப்­புப் பிரிவு அழைப்­பாணை பிறப்­பித்­துள்­ளது.

மலே­சி­யா­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தன் தொடர்­பில் ஊழல் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அதன் தொடர்­பில் தங்­க­ளின் விசா­ர­ணைக்கு உதவ ஊழல் தடுப்­புப் பிரிவு திரு சிவ­கு­மா­ருக்கு அழைப்­பாணை பிறப்­பித்­தது.

இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் சென்ற வாரம் மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களில் இரு­வர் மனி­த­வள அமைச்சு அதி­கா­ரி­கள். திரு சிவ­கு­மா­ரின் அந்­த­ரங்க உத­வி­யா­ளர் கைதா­னது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.