அன்வார்: சிவகுமார் இப்போது விலகிக்கொள்ளத் தேவையில்லை

அன்வார்: சிவகுமார் இப்போது விலகிக்கொள்ளத் தேவையில்லை

1 mins read
0dc2fc30-3f2c-4aaf-bdea-d5fa0c29bf14
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் ஊழல் விவ­கா­ரம் தொடர்­பில் அந்­நாட்­டின் மனி­த­வள அமைச்­சின்­மீது 'எம்­ஏ­சிசி' எனப்­படும் ஊழல் தடுப்­புப் பிரிவு விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது. விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் நிலை­யில் மனி­த­வள அமைச்­சர் வி. சிவ­கு­மார் தற்­போ­தைக்கு அதி­கா­ரத்­து­வப் பொறுப்­பு­க­ளி­லி­ருந்து வில­கிக்­கொள்­ளத் தேவை­யில்லை என்று மலே­சிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் கூறி­யுள்­ளார்.

இந்த விவ­கா­ரத்­தில் தாம் சந்­தேக நபர் அல்ல என்று திரு சிவ­கு­மார் முன்­ன­தா­கக் கூறி­யிருந்­தார். தமது வாக்­கு­மூலத்தைப் பதி­வி­டவே நேற்று முன்­தினம் 'எம்ஏசிசி'யின் தலை­மை­ய­கத்­துக்­குச் சென்­ற­தா­க­வும் தாம் கைது­செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார். அமைச்சின் அதிகாரிகள் சிலர் அண்மையில் கைதாயினர்.