பெய்ஜிங் ரயில்களில் முகக்கவசம் கட்டாயமில்லை

பெய்ஜிங் ரயில்களில் முகக்கவசம் கட்டாயமில்லை

1 mins read
d9c0aa2e-ca13-403d-81c2-215768d44719
-

பெய்­ஜிங்: சீனா­வின் தலை­ந­கர் பெய்­ஜிங்­கின் ரயில்­களில் இனி முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மில்லை என்று உள்­ளூர் ஊட­கங்­கள் அறி­வித்­துள்­ளன.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் இனி யாருக்­கும் அதிக அபா­யம் இல்லை என்று சீனா­வின் சுகா­தார வல்­லு­நர் ஒரு­வர் அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார். அதைத் தொடர்ந்து ரயில்­களில் முகக்­க­வச விதி­முறை தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வல் தொடர்­பில் சீனா­வில் நடப்பில் உள்ள மற்ற விதி­மு­றை­களுக்கு ஏற்­ற­வாறே இந்த விதி­முறை தளர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.