வாஷிங்டன்: அமெரிக்காவில் பதின்ம வயதினர் கலந்துகொண்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது; குறைந்தது நால்வர் மாண்டனர், 28க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் டேட்வில் நகரில் இருக்கும் நடன நிலையம் ஒன்றில் நேர்ந்தது. ஆகக் கடைசி நிலவரப்படி சந்தேக நபர் குறித்த விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
காயமடைந்தோரில் பெரும்பாலோர் பதின்ம வயதினர் என்றும் சிகிச்சைக்காக அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை மட்டுமே அமெரிக்காவில் 163 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

