தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தைவானில் வேலை செய்யும் 158,000 பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்'

1 mins read
1e375ad0-1632-4c66-9e26-d57f7cc9b846
-

மணிலா: தைவா­னில் வேலை பார்க்­கும் 158,000 பிலிப்­பீன்ஸ் ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்பதற்கான திட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக மணிலா உறு­தி­ய­ளித்­துள்­ளது.

சீனா­வுக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடையே பதற்­ற­நிலை மோச­மடைந்­துள்­ளது. அந்த அடிப்­ப­டை­யில் சீனத் தூதர் ஹுவாங் ஸிலி­யேன் வெளி­யிட்ட கருத்­து­க­ளின் தொடர்­பில் பிலிப்­பீன்ஸ் இவ்­வாறு கூறி­யுள்­ளது.

"தைவா­னில் உள்ள சுமார் 150,000 பிலிப்­பீன்ஸ் ஊழி­யர்­களைப் பற்றி உண்­மை­யி­லேயே அக்­கறை இருந்­தால் மணிலா சற்­றும் யோசிக்­கா­மல் தைவான் சுதந்­தி­ர­ம­டை­வதை எதிர்க்­க­வேண்­டும். அதற்­குப் பதி­லாக தைவான் நீரி­ணைக்கு அருகே உள்ள ராணு­வத் தளங்­களை அமெ­ரிக்கா பயன்­ப­டுத்த வகை­செய்து பிரச்­சி­னையைப் பெரி­தாக்­கக்­கூ­டாது," என்று திரு ஹுவாங் கூறி­யி­ருந்­தார். பிலிப்­பீன்ஸ்-சீனா உறவு தொடர்­பில் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று மணி­லா­வில் நடை­பெற்ற மாநாடு ஒன்­றில் அவர் பேசி­னார்.

"பிலிப்­பீன்­சைச் சேர்ந்த ஊழி­யர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் இருக்­கும் எல்லா பகு­தி­க­ளி­லும் அவர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தற்­கான திட்­டங்­கள் இருக்­கின்­றன," என்று பிலிப்­பீன்­சின் வெளி­யு­றவு அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

பிலிப்­பீன்ஸ், தைவா­னு­டன் அர­ச­தந்­திர உறவு வைத்­துக்­கொள்­ள­வில்லை. 'ஒரே சீனா' கொள்­கைக்கு பிலிப்­பீன்ஸ் இணங்கி நடப்­பது அதற்­குக் கார­ணம்.