மனைவியைக் கொன்ற பிறகு ஆடவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக சந்தேகம்

மனைவியைக் கொன்ற பிறகு ஆடவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக சந்தேகம்

1 mins read
93d8a1ff-cbee-4973-9f10-4f45a04c8f9d
-

கோத்தா கின­பாலு: மனை­வியை மூச்சு திண­ற­வைத்­துக் கொன்ற பிறகு ஆட­வர் ஒரு­வர் தனது உயி­ரை­யும் மாய்த்­துக்­கொள்ள முயன்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. மோச­மான தக­ரா­றுக்­குப் பிறகு மனை­வி­யைக் கொன்­று­விட்டு ஆட­வர் தனது கழுத்தை அறுத்­துக்­கொண்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இச்­சம்­ப­வம் மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தின் தலை­ந­கர் கோத்தா கின­பா­லு­வில் நிகழ்ந்­தது. அந்­ந­க­ரின் ஜாலான் பன்­டாய் எனும் பகு­தி­யில் தம்­பதி சத்­த­மா­கத் தக­ரா­றில் ஈடு­பட்­டது அண்டை வீட்டுக்காரருக்குக் கேட்டது.

தம்­பதி கடை­வீடு ஒன்­றின் அறை­யில் வாட­கைக்கு இருந்­த­னர். அண்டை வீட்­டுக்­கா­ரர் நேற்று அதி­காலை சுமார் 5.30 மணிக்கு அங்­குச் சென்று பார்த்­த­போது மனை­வி­யின் உட­லை­யும் நினை­வி­ழந்த நிலை­யில் கண­வ­ரை­யும் கண்­டி­ருக்­கி­றார்.

காலை எட்டு மணிக்­குத்­தான் அண்டை வீட்­டுக்­கா­ரர் தங்­க­ளுக்­குத் தக­வல் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தாகக் காவல்­துறை கூறி­யது.

மாண்ட பெண் 20 வய­து­களில் இருந்­த­தாக கோத்தா கின­பாலு காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். பெண்­ணின் 30 வயது கண­வர் அவ­ரைக் கொன்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வதா­க­வும் அவர் கூறி­னார்.

சிகிச்­சைக்­காக கண­வர் மருத்து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அவர் காவல்­துறை­யின் கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.