மகாதீர்: அன்வார்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறேன்

மகாதீர்: அன்வார்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறேன்

1 mins read
97266a50-b78b-4106-9949-6d23743e376d
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம்­மீது தாம் சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக டாக்­டர் மகா­தீர் முகம்­மது கூறி­யுள்­ளார்.

டாக்­டர் மகா­தீர் பிர­த­மராக இருந்தபோது அவர் தமக்­கும் தமது குடும்­பத்­தா­ருக்கும் சொத்து சேர்த்­துக்­கொண்­ட­தாக திரு அன்­வார் கூறி­யி­ருந்­தார். அதைத் தொடர்ந்து இந்­ந­ட­வடிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் திரு அன்­வார், டாக்­டர் மகா­தீ­ரி­டம் மன்­னிப்­புக் கேட்க நேற்று முன்­தி­னம் வரை கெடு கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. கெடு முடிந்­து­விட்­ட­தை­ய­டுத்து டாக்­டர் மகா­தீர் இவ்­வாறு அறி­வித்­துள்­ளார்.

தாங்­கள் புரிந்­த­தா­கக் கூறப்­படும் எல்லா தவ­று­க­ளுக்­கும் நீதி­மன்­றத்தில் பதி­ல­ளிக்க அன்­வார் தரப்பு தயா­ராய் இருப்­ப­தாக அவ­ரின் வழக்­க­றி­ஞர் கடிதம் ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளார் என்று டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர் சொன்னார்.