கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு மாதை வெட்டி, அவரை பாலத்துக்குக் கீழ் வீசி எறிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிகம் சத்தம் போட்டதாக அந்த 52 வயது மாது தங்களிடம் கடுமையாகக் கூறியதால் ஆடவர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது.
இச்சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தின் கம்போங் சாவா பான்டிங் பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று நிகழ்ந்தது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் மாதைக் காப்பாற்றினர்.

