சூடான் மோதல்களில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

சூடான் மோதல்களில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
81af2996-3d76-48cb-8077-58ba6f63aef6
-

கார்ட்­டூம்: சூடா­னில் ராணு­வத்­துக்­கும் ஆர்­எஸ்­எஃப் எனப்­படும் துணை ராணு­வப் படை­யி­ன­ருக்­கும் இடையே தொட­ரும் மோதல்­களில் குறைந்­தது 185 பேர் மாண்டு­விட்­ட­தா­க­வும் 1,800க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் புள்ளிவிவ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

தலை­ந­கர் கார்ட்­டூ­மில் முக்­கிய இடங்­கள் தங்­க­ளின்­வ­சம் இருப்­ப­தாக ராணு­வ­மும் துணை ராணு­வப் படை­யும் கூறி­யுள்­ளன. அந்­ந­க­ரில் வெடிப்­பு­க­ளி­லி­ருந்து தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்­ளும் முயற்­சி­யில் பொது­மக்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

சூடா­னில் அமெ­ரிக்க அர­ச­தந்­தி­ரக் குழு ஒன்றை நோக்கி துப்­பாக்­கிச்­சூடு இடம்­பெற்­றி­ருக்­கிறது.

யாரும் காய­ம­டை­ய­வில்லை என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­கன் தெரி­வித்­தார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் தூதர் ஒருவரும் கார்ட்­டூ­மில் இருக்­கும் அவ­ரின் வீட்­டில் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் முன்னதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், சண்­டையை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் கேட்­டுக்­கொண்­டது. சூடா­னின் ராணு­வத் தலை­வர்­களு­டன் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் வெள்ளை மாளிகை குறிப்­பிட்­டது.