வியன்னா: கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட நகருக்கே திரும்பி வந்தது.
ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் உள்ள எட்டு கழிவறைகளில் ஐந்தில் அடைப்பு ஏற்பட்டது.
அதனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவுக்குப் புறப்பட்ட அந்த விமானம் இரண்டு மணிநேரத்தில் மீண்டும் நியூயார்க் திரும்பியது.
கோளாற்றால் கழிவறைகளில் கழிவை அகற்றும் 'ஃபிளஸ்' முறை வேலை செய்யாமல் போனதால் இந்நிலை உருவானதாக ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சினை அந்நிறுவனத்தின் விமானங்களில் ஏற்பட்டதில்லை என்றும் அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பயணிகள் இதர விமானச் சேவைகளுக்கு மாற்றிவிடப்பட்டனர்.


