மான்செஸ்டர்: பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் சேலையில் நெட்டோட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற இவர், 42.2 கிலோமீட்டர் தொலைவு நெட்டோட்டத்தையும் சேலையிலேயே ஓடி முடித்தார்.
இவர் எடுத்துக்கொண்ட நேரம் நான்கு மணிநேரம் 50 நிமிடங்கள்.
மான்செஸ்டர் நகரில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜெனா, உலகின் பல பகுதிகளில் நெட்டோட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.
சேலையில் ஓடுவதன் மூலம் இந்திய மரபையும் கலாசாரத்தையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவரின் நோக்கம்.