தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$460க்கு 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டு

1 mins read
5b04889d-3cbe-4d3c-ab51-9b25d7385a05
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்கியோ: ஜப்பானின் 'ஏஎன்ஏ' பயணிகள் விமானத்தில் 10,000 டாலர் (13,300 வெள்ளி) மதிப்பிலான உயர்தர 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டு சில நூறு வெள்ளிக்குக் கிடைத்திருக்கிறது.

நாணயச் செலாவணி தொடர்பில் ஏற்பட்ட கோளாறால் சில பயணத்தளங்களில் அவற்றின் விலை மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

சிங்கப்பூரர்கள் உட்பட பலர் மலிவான 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டுகளை வாங்கினர்.

வியட்னாமுக்கான தங்களின் இணையத்தளத்தில் நேர்ந்த தவற்றைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதென 'ஏஎன்ஏ' விமானச் சேவையை வழங்கும் 'ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.

தவறு நேர்ந்ததற்கான காரணத்தை அறியும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

குறைந்த விலைக்கு 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டுகளை வாங்கியோரால் அவற்றைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து இம்மாத இறுதியில் முடிவெடுக்கப்படும் என்று 'ஏஎன்ஏ'யின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதற்கு முன்பு பயணம் செய்வோரால் அப்பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தமுடியும்.