கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் போதைப்பொருள் உட்கொண்ட ஆடவர் ஒருவர் காவல்துறை அதிகாரியின் கை விரல் நுனியைக் கடித்துத் துப்பினார்.
இச்சம்பவம் திங்கட்கிழமையன்று (17 ஏப்ரல்) இரவு 10.15 மணியளவில் சுங்கை பெசி காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக செராஸ் வட்டாரத்தின் காவல்துறை உதவி தளபதி ஸாம் ஹலீம் ஜமாலுதீன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அறிக்கை புதன்கிழமையன்று (19 ஏப்ரல்) வெளியிடப்பட்டது.
காவல்துறை அதிகாரிமீது அமிலத்தை வீசப்போவதாக மிரட்டிய ஆடவர் அவர்மேல் போத்தலில் இருந்த தண்ணீரைத் தெளித்திருக்கிறார்.
அதற்குப் பிறகு அத்துமீறி காவல் நிலையத்துக்குள் நுழைந்தார்.
ஆடவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அவர் ஓர் அதிகாரியின் விரல் நுனியைக் கடித்துத் துப்பியதாகத் திரு ஸாம் சொன்னார்.
அந்த 34 வயது ஆடவர் ஏற்கெனவே ஏமாற்றுச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுபவர்.
அவரின் உடலில் போதைப்பொருள் கலந்திருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் 2020ஆம் ஆண்டில் மனநல சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.