ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் சிறு இறால்களைக் கடத்த முயன்ற ஆடவர் ஜோகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஓட்டிச் சென்ற சிங்கப்பூர் காரை மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
அந்த ஆடவர் கடத்த முயன்ற கிட்டத்தட்ட 100 சிறு இறால்களின் மொத்த மதிப்பு 400 ரிங்கிட் (120 வெள்ளி) என்று மலேசிய சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவின் விவசாயத் துறையைப் பாதுகாக்கவே அந்நாட்டுக்குள் கொண்டுவரப்படும் சிறு இறால்கள் கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரிவி்க்கப்பட்டது.

